ஜா – எல, வெலிகம்பிட்டிய பகுதியில் 18 இலட்சத்திற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொபேகனே பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.
மேலதிக விசாரணைகளை ஜா – எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.