அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை டயகம பிரதான பாதையில் மன்றாசி என்னும் இடத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை காலநிலை காரணமாக பாரிய குழி ஏற்பட்டுள்ளது .இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகன சாரதிகள் மிக ஆபத்தான நிலையில் இந்த இடத்தை கடக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இரவு நேரங்களில் இருசக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள் பயணத்தின் போது பலர் இந்த இடத்தில் வீழ்ந்து காயங்கள் ஏற்படட்உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.அதனால் இப்பாதையில் இருக்கின்ற குழியை உரிய முறையில் செப்பனிட்டு தருமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.