யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் இன்று(7) காலை தீடீரென உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த பெண் வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா வயது 32 என்ற ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் . சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.