கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட புளியம்பொக்கனை நாகேந்திரபுரத்தில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு 7600 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கொழும்பு சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் கிளிநொச்சி சின்னையா மிஷன் ஆகியோர் இன்று 07.12.2024 இந்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.