வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(6) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார்.
பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நேற்று மாலை நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து குறித்த நபரைத் தேடும் பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
நீண்டநேரமாகத் தேடுதல் இடம்பெற்று வந்த நிலையில் சிலமணி நேரங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.