பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (05/11) அமைச்சின் கீழ் உள்ள அரசுக்கு சொந்தமான பெருந்ததோட்டங்கள் சார்ந்த நிறுவனங்களின் தற்போதைய நிலை குறித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில், அந்த நிறுவனங்களின் நிலையை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு செய்தல், திறமையான அரச சேவையின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் வரவு செலவு முன்மொழிவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன்போது பொருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் திரு K. V சமந்த விதயாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை அரசு தோட்ட கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட எல்கடுவ தோட்ட கம்பனி (Private Limited), வரையறுக்கப்பட்ட குருநாகல் தோட்ட நிறுவனம் (Private Limited), வரையறுக்கப்பட்ட சிலாபம் தோட்ட நிறுவனம் (Private Limited), களுபோவிட்டியன தேயிலை தொழிற்சாலை (Private Limited), மக்கள் தோட்ட மேம்பாட்டு வாரியம், வேளாண்மை துறையின் புதுமைத் திட்டங்கள் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.





