மன்னாரில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று காலை (6) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் ச – நிரோசன் வயது 32 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடற்தொழில் செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.