நாடளாவிய ரீதியில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக 2000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் உணவு மற்றும் பானங்களின் தூய்மை தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பல தொற்று நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் செயலாளர் சமில் முதுகுடா குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
குறித்த சோதனைகளின் போது, உணவகங்களில் உள்ள சமைத்த உணவுகளை பரிசோதிக்கும் பணியே பிரதானமாக இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.