பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாற்கள் கொண்ட வேலைத்திட்டம் கடந்த 25ம் திகதி முதல் இம்மாதம் 10 திகதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன அந்தவகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி முத்துலிங்கம் வழிக்காட்டலில் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் USAID நிறுவன நிதி உதவியுடன் 05 அன்று பதுளை ஊவா மாகாண பொது நூலக மண்டபத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு. இடம்பெற்றது.இதன் போது காலை 10 மணிக்கு பதுளை நகரத்தில் உள்ள கிங்ஸ் விளையாட்டு மைதானத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண் பெண் என இருபாலரும் பதாகைகள் ஏந்தி கோசங்களை எழுப்பி பிரதான நகரத்தின் ஊடாக பொது நூலக பிரதான மண்டபத்திற்கு பேரணியாக வந்தடைந்தனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் மனுசங்கடா மனுசங்கடா நாங்களும் மனுசங்கடா நீங்களும் மனுசங்கடா நாங்களும் மனுசங்கடா நிறுத்துவோம் நிறுத்துவோம் பெண்கள் மீதான வன்முறையை நிறுத்துவோம்.பெண்களின் அடக்குமுறை ஒழிப்போம் போன்ற கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில். பெண்களின் உரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் பிரதம அதிதிகளின் உரை இடம்பெற்றது.இந்நிகழ்வில் 7 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகள் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241205-WA0223.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241205-WA0222.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241205-WA0224.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241205-WA0226.jpg)
![](https://thinakaran.com/wp-content/uploads/2024/12/IMG-20241205-WA0225.jpg)