நாரம்மல – குளியாப்பிட்டிய வீதியில் பொரலுவல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
நாரம்மல கடஹபொல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நாரம்மல நோக்கிப் பயணித்த உந்துருளி ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது உந்துருளி செலுத்துனரும் வீதியில் பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.