கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுமார் 50 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இன்று (05) காலை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
குறித்த ஊழியர்கள் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதால் மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளில் கட்டுநாயக்க பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.