இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற உள்ளது.
இந்திய அணி சமீபத்தில் உள்ளூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதனை அடுத்து இந்தப் போட்டியில் களம் இறங்குகிறது.
ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த தொடரில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு தாலியா மெக்ராத் தலைமை தாங்குகிறார்.
இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.