யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அரியாலைப் பகுதியில் திருமணம் செய்த குறித்த தாய் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை(3) சிகிச்சை பலனின்றி குறித்த தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
சம்பவத்தில் ஜீவராஜ் ரேவதி 38 எனும் வயதுடைய 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த இளம் தாயின் உயிரிழப்பு அப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.