புத்தளம் – சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள், நேற்று பிற்பகல் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக சிலாபத்தில் குழந்தையொன்று உயிரிழந்தாகவோ அல்லது புதைக்கப்பட்டதாகவோ இல்லை எனவும் சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அவ்வாறான குழந்தை மரணம் குறித்த தகவல் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ADVERTISEMENT
இந்த நிலையில் இந்த குழந்தையின் காலை நாய் எங்கிருந்து கொண்டு வந்தது என சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.