மாத்தறை – அக்குரெஸ்ஸ பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
அக்குரெஸ்ஸவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காரும் மின் கம்பமும் பலத்த சேதமடைந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.