சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்துவதுடன் கட்டுப்பாட்டு விலையை மீறியும் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தநிலையில் அரிசி தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. அதற்கமைய, அதற்கான விலை மனுக் கோரல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது.
பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.