தம்புள்ளை – ஹபரன வீதியில் இனாமலுவ பகுதியில் நேற்று(30) லொறியொன்று பாதசாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கி பயணித்த லொறி பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடந்த நபர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த பாதசாரி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
லொறியின் சாரதியும் சிகிச்சைக்காக கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.