பண்டாரவளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை வீட்டின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.