யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்ன சத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று காலை 10:45 மணியளவில் இடம் பெற்றது.
இதில் “அறமும் ஆண்டவனும்” என்ற ஆன்மீகத் தலைப்பில் ஆசிரியரான ஶ்ரீ.ஆதவன் அருளுரை நிகழ்த்தினார்.
ADVERTISEMENT
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலாச்சார பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
