மஸ்கெலியாவில், சுமார் 83 இலட்சம் ரூபாய் பெறுமதியான வான் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கஹவத்த காவல்துறை பிரிவில் உள்ள ஓபேவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகக் குறித்த வான் வவுனியா பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் மஸ்கெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.