இன்று வியாழக்கிழமை(14) 33 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் என ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமூகமளிக்காமை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளன.
இன்று முற்பகல் பயணிக்கவிருந்த 10 ரயில் சேவைகளும் இதில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய 23 ரயில்களும் இன்று பிற்பகல் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியவை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
அதன்படி, பிரதான மார்க்கத்தில் 13 ரயில்களும், கரையோர மார்க்கத்தில் 8 ரயில்களும், புத்தளம் மார்க்கத்தில் 6 ரயில்களும், களனி மார்க்கத்தில் 6 ரயில்களும் இன்று இரத்து செய்யப்படவுள்ளன.