கொஸ்கம – அஸ்வத்த வீதியில் தும்மோதர கால்வாயைக் கடக்க முற்பட்ட கெப் ரக வாகனமொன்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில், சாரதி உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.