யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
கிறிஸ்துராஜா கொலின்ஸ் என்பவரது வீடே இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டது. இவர் கடந்த காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரிந்தவர் என தெரியவருகிறது.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரவு 11 மணியளவில் வீட்டில் உள்ளவர்கள் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





