களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம, வெலிகெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சந்தேக நபரிடமிருந்து 74 தேர்தல் சுவரொட்டிகளும் முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.