அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்பொக்க பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (28) ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பியகம, கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.