குருணாகல் கிரியுல்ல, மெத்தேபொல பிரதேசத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவியின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலை மாணவி கடந்த 23 ஆம் திகதி அன்று இரவு உணவிற்காக கிரியுல்ல நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து கோழி பிரியாணி பொதி ஒன்றை கொள்வனவு செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பாடசாலை மாணவி இரவு உணவை உட்கொண்ட பின்னர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பாடசாலை மாணவியின் உடலில் அரிப்புகள் ஏற்பட்டு தழும்புகள் தோன்றியுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவியின் சடலம் குருணாகல் வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து மாணவியின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.