கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலைகளை இன்றைய தினம் (26.10.2024) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி, புனரமைப்பு வேலைகளின் முன்னேற்றத்தினை கேட்டறிந்து கொண்டார்.
குறித்த பாலமானது ஆபத்தான நிலையில் காணப்பட்ட நிலையில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.