யாழ்ப்பாணத்தில் நபரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சுசிகரன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு நீண்ட வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது. அதன்பின்னர் இவருக்கு இடையிடையே வாந்தி ஏற்படுவது வழமை.
கடந்த 25ஆம் திகதியும் காலை 10 மணிக்கு இவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் 11 மணியளவில் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.