யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அராலி தெற்கு வட்டுகோட்டையை சேர்ந்தவர் ஆவார்.
யாழ்ப்பாணம் – அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் 7 கிராம் 500 மில்லி கிராம் கஞ்சா இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையின் பின்னர் அவரை இன்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.