வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி காட்டுப் பகுதியில் இன்று (25.10.2024)படகு ஒன்றின் வெளி இணைப்பு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.
ஆழியவளையை சேர்ந்த நபர் ஒருவர் நாவல் பழம் பறிப்பதற்காக காட்டுக்கு சென்றவேளை மணலில் புதையுண்ட நிலையில் 25 குதிரை வலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரத்தை கண்டுள்ளார்
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தலைவருக்கு தெரியப்படுத்தியதுடன் பொலிசாருக்கும் தெரியப்படுத்தினர்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் வெளி இணைப்பு இயந்திரத்தை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பதற்காக தமது சங்கத்தின் காவலில் வைத்துள்ளனர்.


