மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 5000 லீட்டர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா, புதுக் குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி உட்பட பல இடங்களில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள் கசப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.