ஹட்டன் நகரில் உள்ள பிரதான தனியார் அரச பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையாலும், அந்த கழிவறையில் இருந்து வெளிவரும் கழிவு நீரினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள், பாடசாலை மாணவர்கள், பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோர் இந்த பேருந்து தரிப்பிடத்திற்கு வந்து செல்கின்றனர். அத்துடன் பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பல வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள் என்பனவும் உள்ளன. எனவே பாரிய சுகாதார சீர்கேடாக உள்ள கழிவறையால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
தற்போது தீப திருநாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இந்த வாரம் அந்த பேருந்து தரிப்பிடத்திற்கு வருவார்கள். ஆகையால் ஹட்டன் நகர சபையானது முன்வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, அங்குள்ள பொதுக் கழிவறையை மூடி நவீன முறையில் கழிவறை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.