வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (18) மாலை இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது போருக்கான முடிவுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்றைய தினம் கூறிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.