தெற்கு அதிவேக வீதியில் 153 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
மத்தல நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்திலிருந்த சக்கரமொன்று பழுதடைந்ததன் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இந்த விபத்தின் போது, லொறியின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.