கம்பஹா,திவுலப்பிட்டிய , படல்கம பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
உயிரிழந்தவர் 50 வயதுடையவராவார்.
தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.