வௌ்ளப்பெருக்குக் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாறும் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்துகம, அளுத்கம வீதியில் சுமார் 4 1/2 அடி உயரத்திற்கு நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதேவேளை தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதி எஸ்வத்த சந்தியிலிருந்து ஹிங்குரல சந்தி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.