ஹிக்கடுவை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இச் சம்பவத்தில் 20 வயதுடைய அமெரிக்கப் பிரஜையும் 30 வயதுடைய சுவிஸ்டர்லாந்து பிரஜையுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.