தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (08.10.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ADVERTISEMENT
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்கத்தின் பிரதி ஆணையாளார் திரு எஸ்.அச்சுதன் அவர்களும் கலந்து கொண்டார்.