எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஈடுபடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இன்று இடம்பெற்ற இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் பொதுச் சபையை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.