இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ADVERTISEMENT
இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தக சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர்