வவுனியா பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று (26) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்
இன்று பிற்பகல் குருக்கலூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் எனும் இளைஞரே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி முற்றிலும் எரிந்துள்ளது
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.