இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசிய மக்கள் கட்சி ஆதரவாளர்கள் கிண்ணியா புஹாரியடி சந்தியில் இன்று (23) திசைகாட்டி வடிவிலான கேக்கினை வெட்டி வெற்றிக்களிப்பில் ஈடுபட்டனர்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் இன்று திங்கட்கிழமை (23) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ADVERTISEMENT
அதனையடுத்தே, கட்சி ஆதரவாளர்கள் பலர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

