வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா நேற்று மாலை 13.09.2024 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது
செம்பியன்பற்று பங்குத்தந்தை ஆ.யஸ்ரின் அடிகளார் தலைமையில் மாலை 3.00 மணியளவில் சென் பிலிப்நேரியார் ஆலயத்தில் விளையாட்டு நிகழ்வு ஆரம்பமானது
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டு சங்கீதப்பந்து,பூக்கோத்தல் ,நீர்நிரப்புதல் வினோத உடை,
ஆகிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன
போட்டியில் பங்குபெற்றிய சிறுவர்களுக்கு பரிசில்களும் வளங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.க சத்தியசீலன்
முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர்,வடமராட்சி வலையம் பருத்தித்துறை
சிறப்பு விருந்தினராக செ.பகீரதக்குமார் யா/செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை அதிபர்
நிகழ்வின் கெளரவ விருந்தினர்களாக அருட்சகோதரி கிறீஸ்ரினா
யா/செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை ஆசியர் திருமதி சி.ஜெயந்தினி
மருதங்கேணி கோட்ட இணைப்பாளர் திருமதி அ.நவறாணி
பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மருதங்கேணி திருமதி ல.றம்மியா
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் செம்பியன்பற்று வடக்கு ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பொதுமக்கள் பலரும் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.