வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் துண்டுப்பிரசுரங்களை பறிமுதல் செய்தனர்.
இதன்பிரகாரம் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கயேந்திரன்,
ADVERTISEMENT
சற்குணதேவி ஜெகதீஸ்வரன்,
செல்வராசா உதயசிவம் ஆகிய மூவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
