அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸின் தாத்தா குறித்து அவர் ‘X’ தளத்தில் இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பதிவில் கமலா ஹரிஸ், தனது தாத்தா இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
எனினும், அவரின் தாத்தாவான P.V. கோபாலன், இந்தியாவை பிரித்தானியா ஆட்சி செய்த போது, இந்திய பொலிஸ் துறையில் பணியாற்றியவர் ஆவார்.
ஆகவே, அவர் எவ்வாறு பிரித்தானிய அரசுக்கு எதிராக செயற்பட்டிருப்பார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கமலா ஹரிஸின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
