ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனையில்லாமல் ஆதரவு வழங்கி புதிய அரசியல் கூட்டணியை அமைத்துள்ளோம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது.
பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.