ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கல்முனை தேர்தல் தொகுதியின் தேர்தல் நடவடிக்கை செயற்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் மருதமுனை தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவின் கல்முனை தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள், பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Related Posts
அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!
அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசமைப்பை நிறைவேற்ற தமிழரசு தீவிரம்.!
புதிய அரசமைப்பு என்ற பெயரில் 'ஏக்கிய ராஜ்ஜிய' (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்றும்,...
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “சிறு குற்றங்கள்” எனும் விழிப்புணர்வு கருத்தரங்கு.!
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களுக்காக "சிறு குற்றங்கள்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று...
19 துப்பாக்கிகள் மீட்பு; பிரதான சந்தேகநபர்கள் கைது.!
தெமட்டகொடை பகுதியில் கடந்த ஜூன் 3ஆம் திகதி 19 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஆணும் பெண்ணும் கதிர்காமம் பகுதியிலுள்ள...
டிக்கோயா நகரக் கழிவுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கொட்டப்படுவதால் மக்கள் பாதிப்பு.!
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பணியாளர்களினால் சேகரிக்கப்படும் நகரக் கழிவுகள், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் டிக்கோயா ஓடையில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள்...
யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; இருவர் கைது.!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து...
கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் 16.06.2026 நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலியாகியுள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை நோக்கி...
அரசு வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.!
அரசாங்கம் தேர்தல் காலத்தில் வீட்டு வேலை பணியாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என வீட்டு வேலை பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் ப்ரோட்டெக்ட் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது....
எரிபொருள் விலை குறைப்பு உறுதி.!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே...
புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு நடவடிக்கை.!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை...










