யாழ். தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1,500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை 9.00 மணியளவில் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
ADVERTISEMENT
இதேவேளை, தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என முன்னர் பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.