நேற்று சனிக்கிழமை மாலை ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக அந்த நபரும் அவரது சகோதரரும் இணைந்து இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கனன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹொரணை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.