பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், அடுத்த வெள்ளிக்கிழமை, பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்.
பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நல்லபடியாக நடத்தி முடித்தாயிற்று. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன், மேக்ரான் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பிரான்சுக்கு புதிய பிரதமரை அறிவிக்கும் முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார்.
ஆகவே, அவர் அறிவித்தபடி இப்போது அவர் புதிய பிரதமர் பெயரை அறிவிக்கவேண்டும்.
ஆகவே, புதிய பிரதமர் தேர்வு தொடர்பில், அடுத்த வெள்ளிக்கிழமை, மேக்ரான் பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.
அவர்களைக் கலந்தாலோசித்தபின், மேக்ரான் அவர்கள் முன்மொழியும் புதிய பிரதமர் பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.